வடமதுரை ரயில் நிலைய தின விழா
வடமதுரை : திண்டுக்கல் விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டப் பணி துவக்கத்தில் வடமதுரையில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய ரயில்வே ஸ்டேஷனுக்கு பதிலாக ரயில் ஹால்ட்டாக தரம் குறைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கடும் முயற்சியால் 2016 ஜூன் 10ல் வடமதுரையில் முழுமையான ரயில் நிலையமாக தொடர ஒப்புதல் கிடைத்தது. இந்நாளை வடமதுரை ரயில் நிலைய பாதுகாப்பு குழு, பயணிகள் நலச்சங்கத்தினர் 'வடமதுரை ரயில் நிலைய தினமாக' கொண்டாடுகின்றனர். நேற்று நடந்த 9ம் ஆண்டு விழாவிற்கு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். தற்போது வடமதுரையில் நின்று செல்லும் ரயில்களை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, இங்கு 3வது பாதை ரூ.10.33 கோடியில் நீட்டிப்பு செய்வதற்கு ரயில்வே துறைக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.