வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொறையை ஸாரி பிச்சையை ஸாரி இனாமை, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால் வருவார்கள்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் பின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் துவங்கி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடந்து வருகிறது. துவக்கத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றாலும், முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு எட்ட வேண்டும் என்ற கண்டிப்பால் அனைத்து துறை அதிகாரிகளும் முகாமில் பங்கேற்பதில் ஆர்வம் இன்றி இருந்தனர். முகாமில் பங்கேற்பதால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாக குறை கூறி வந்தனர். இதன் செலவினங்களை யார் பொறுப்பேற்பது என வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறையினர் இடையே குழப்பம் ஏற்பட்டு பின் ஊராட்சி செயலாளர்களிடம் ஒப்படைத்து விட்டனர். ஊராட்சி செயலாளர்களோ கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் செலவினத்தை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் 4 ஆண்டுகளாக செய்யாத பணிகளை இந்த நான்கு மாதத்தில் செய்து விடுவார்களா என கேள்வி எழுப்புகின்றனர். இதையும் மீறி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான கூட்டம் குறையாமல் இருந்தது. காலப்போக்கில் அதிகாரிகளின் மெத்தனம், இடம் தேர்வு ஆகியவை பயனாளிகள் பங்கேற்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஐந்து கிலோ மீட்டர் ,எட்டு கிலோமீட்டர் துாரத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்பது குறைந்து வருகிறது.
பொறையை ஸாரி பிச்சையை ஸாரி இனாமை, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால் வருவார்கள்.