சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு துறையில் காலி பணியிடங்கள், தொகுப்பூதியம் இல்லாத பணியிடமாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற இதற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் மாலதி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுகந்தி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் முபாரக் அலி பேசினார்.