மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் மாவட்ட மாநாடு
27-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 16வது மாநில மாநாடு 2 நாட்களாக நடந்தது.இதில் பிரதிநிதிகள் மாநாடு, விவாதம், கருத்தரங்கம், பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. மாநிலம் முழுவதுமிருந்து பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். மாநாட்டில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 2021 தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப் படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குப் பதிலாக சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 39 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று பொது மாநாடு நடந்தது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கலா தலைமை வகித்தார். வரவேற்பு குழுத் தலைவர் சுகந்தி வரவேற்றார். பொதுச் செயலாளர் மலர்விழி தீர்மானம் குறித்து விளக்கிப் பேசினார். மாநாட்டில் அமைச்சர் பெரியசாமி, சச்சிதானந்தம் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பொருளாளர் திலகவதி நன்றி கூறினார்.
27-Apr-2025