உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

பழநி : பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரி வீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த கண்காணிப்பு குழு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஜனவரி மாதம் அடிவாரம், பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். தற்போதும் தள்ளுவண்டி மற்றும் கை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் ஆக்கிரமிப்பு குறித்த கண்காணிப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், பழநி கிரிவிதி, சன்னதி வீதி படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். கோயில் இணை ஆணையர் பாரதி உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ