உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்

 ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாள் நினைவுக்கூரும் வகையில் ஆட்சிமொழிச்சட்டம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முகாம் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி பஸ் ஸ்டாண்ட், பூமார்க்கெட் வழியாக மாநகராட்சி அலுவலகம் வரை நடந்தது. இதில், ஆர்.டி.ஓ., திருமலை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் விஜயபாண்டியன், கலைக் கல்லூரி, ஐ.டி.ஐ., பள்ளி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி