உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் நடமாடும் போலி டாக்டர்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கொடையில் நடமாடும் போலி டாக்டர்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கொடைக்கானல் : கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர். இவர்களை சுகாதாரத் துறையினர் கண்டுகொள்ளாத போக்கும் நீடிக்கிறது.கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுகின்றன. மன்னவனுார், பூலத்துார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது. சில தினங்களுக்கு முன் கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி 24, அறுவை சிகிச்சை செய்து பிரசவமான நிலையில் வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த பிரின்ஸ் என்பவர் அளித்த தவறான சிகிச்சையில் பலியானார் .தொடர்ந்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சீல் வைத்து சிகிச்சை அளித்த பிரின்ஸ் மீது போலீசில் புகார் அளித்தது. மலைப்பகுதியை பொருத்தமட்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலமுறையில் பணிபுரிவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மாறாக செவிலியர்களே சிகிச்சை அளிக்கும் போக்கு உள்ளது. இத்தகைய சூழலில் மலைப்பகுதி மக்கள் அறியாமையில் அருகில் உள்ள மருந்தகம்,மருத்துவத்திற்கு படிக்காத போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. பூம்பாறை, கவுஞ்சி , குண்டுபட்டி, பழம்புத்துார், கூக்கால், மன்னவனுார், கீழானவயல், கும்பூர், போலுார், கிளாவரை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மருத்துவத்திற்கு படிக்காமல் சிகிச்சை அளிக்கும் நபர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். சுகாதாரத்துறை ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். மலைப்பகுதி முழுவதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை