நாளை ஒக்கலிகர் பவன் திறப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒக்கலிகர் பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது பழைய கரூர் ரோடு எம்.வி.எம். நகர் 'எப்' பிளாக் பிரதான ரோட்டில் ஒக்கலிகர் பவன் என்ற பெயரில் சொந்த கட்டடம் கட்டி உள்ளனர். இங்கு நாளை (டிச.29-)காலை 10:00 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது. கோயம்புத்துார் ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி திறந்து வைக்கிறார்.