உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது

ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமானை போலீசார் கைது செய்தனர்.பழநி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் 35. இவர் உட்பட 12 பேரிடம் 2023ல் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.,தொண்டர் உரிமை மீட்புக்குழு மாவட்ட பொருளாளராக உள்ள மாதவத்துரை39,கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் இருவரும் பழநி கோயில், வனத்துறை,ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சத்தை பெற்றனர்.12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதவத்துரை தலைமறைவானார். கலில்ரகுமான் இது போல் மோசடியில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ளது தெரியவந்தது. அவரை போலீஸ் காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ