உள்ளக புகார் குழு அமைக்க உத்தரவு
திண்டுக்கல்: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்படி மாவட்டத்தில் 10-க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலில் பணி புரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அக்.31க்குள் அமைத்து, அதன் விவரத்தினை ஷி பாக்ஸ் (SHE BOX) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் அறிக்கையினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். உள்ளக புகார் குழு ஏற்படுத்தப்படாத அலுவலர்கள், நிறுவனங்களின் மீது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.