உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிப்.21ல் பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா துவக்கம்

பிப்.21ல் பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா துவக்கம்

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.21ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்க உள்ளது.பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள இக்கோயில் பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். பிப். 21 இரவு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கும் இவ் விழாவில் பழநியை சுற்றிய கிராம மக்கள் பங்கேற்பர். பிப். 25ல் திருக்கம்பம் சாட்டுதல், மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நடைபெறும். மார்ச் 11 ல் திருக்கல்யாணம், மார்ச் 12 ல் திருத்தேரோட்டம் நடக்க உள்ளது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை