உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி பாதயாத்திரை பக்தர்கள் பேட்டி..

பழனி பாதயாத்திரை பக்தர்கள் பேட்டி..

ஒளிரும் பட்டை வழங்கலாமேபி.ஜீவா, பாதயாத்திரை பக்தர், சத்திரவெள்ளாளப்பட்டி, மதுரை:நெடுஞ்சாலை ஓரம் பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் நடைபாதையில் வாகனங்கள், கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் நாங்கள் சாலையில் விபத்து அபாயத்துடன் செல்லும் நிலை உள்ளது. பல இடங்களில் பேவர் பிளாக் சாலையில் செடிகள் வளர்ந்து நடந்து செல்ல முடியாத வண்ணம் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பல இடங்கள் சேதமடைந்து ,கழிவுநீர் செல்வதால் இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது. மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இருளில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அரசு மண்டபங்களை ஊராட்சி நிர்வாகத்தினர் திறந்து வைக்க வேண்டும். பக்தர்கள் பலர் வேறு வழியின்றி நிழற்குடை , சாலை ஓரங்களில் துாங்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை