உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

 பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

பாலசமுத்திரம்: பழநியில் பாலாறு-பொருந்தலாறு அணை நீர் பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக திறக்கப்பட்டது. பழநி பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து நேற்று ( டிச.24) முதல் 2026 மார்ச் 3 வரை 70 நாட்களுக்கு 770.77 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பாலாறு- பொருந்தலாறு அணை நீரை பாசனத்திற்காக திறந்தார். இதனால் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பு பகுதிகளில் உள்ள பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்துார், மானுார், கோரிக்கடவு, கீரனுார் பகுதி கிராமங்கள் 6168 ஏக்கர் பாசன வசதி பெறும். தற்போது அணையில் 56.76 அடி (65 அடி) நீர் உள்ளது. வினாடிக்கு 32 கன அடிவரத்து நீர் வரத்துடன் 122 கன அடி நீர் வெளியேறுகிறது. செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி பொறியாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ