உள்ளூர் செய்திகள்

பஞ்சமி வழிபாடு

ரெட்டியார்சத்திரம்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடை தண்டினி வாராஹி அம்மன் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை பொழியவும், உலக நன்மையும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. யாக பூஜையை கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தினார். மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !