வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்கள் அதிக பகை வளர்க்கிறது.
வேடசந்துார்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் 15 வது நிதிக்குழு மானிய நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் ஊராட்சி நிர்வாகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக குமுறல் எழுந்துள்ளது. மத்திய அரசானது ஊராட்சிகளின் நிர்வாக நலன் கருதி 15- வது நிதி குழு மானிய நிதியை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 3 மாதங்களுக்கு ஒரு முறை, மக்கள் தொகை அடிப்படையில் குறிப்பாக ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் நிறைந்த ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டு வந்தது. நிதியிலிருந்து குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ளாட்சி தலைவர்களின் பதவி காலத்தில் 15- வது நிதி குழு மானிய நிதி நிதி முறையாக வந்த நிலையில் தற்போது தலைவர்களின் பதவிக் காலம் முடிந்ததால் இந்த நிதியும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக குமுறல் எழுந்துள்ளது.
கிராம மக்களின் அடிப்படை தேவைகள் , பிரச்னைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமாயின், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற வேண்டும். அந்தந்த ஊராட்சிகளுக்கான தலைவர் செயல்பாட்டில் இருந்தால்தான், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படும். மாவட்ட நிர்வாகம் ,எம்.எல்.ஏ., எம்.பி., என சந்தித்து பேசி மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். அப்போதுதான் மத்திய அரசின் 15 வது நிதி குழு மானிய நிதியும் வந்து சேரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதவரை இந்த நிதி வந்து சேர வாய்ப்பில்லை.தமிழக அரசுதான் மக்கள் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். - வி.கோபால்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர், ஆர்.புதுக்கோட்டை
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்கள் அதிக பகை வளர்க்கிறது.