உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்

பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்

பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழா, வரும் 5ம் தேதி துவங்குகிறதுமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள பழநி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோவிலில் வரும் 5ம் தேதி காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10ம் தேதியும், அன்று மாலை வெள்ளித் தேரோட்டமும் நடக்கிறது.ஏப்., 11ம் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், 14ம் தேதி இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கிரிவீதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை