கொடையில் பாரா சைலிங்க் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் துவங்கிய பாரா சைலிங்கில் சுற்றுலா பயணிகள் வானில் பறந்து மகிழ்ச்சியடைந்தனர்.கோடை கால சீசன் துவங்கியதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கொடைக்கானல் மூஞ்சிக்கல் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் பாரா சைலிங் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. 15 வயது முதல் 60 வயதினர் இதில் பறக்கலாம். இதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ. 200 வசூலிக்கப்பட்டது. இதை ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பறந்தனர். இருந்தபோதும் ஒரு சில மணி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் மதியத்திற்கு பின் நிறுத்தப்பட்டது. மேலும் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் பாரா சைலிங்கில் பறக்கலாம்.