உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கயிறு கட்டி ஆற்றை கடந்த மக்கள்

திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கயிறு கட்டி ஆற்றை கடந்த மக்கள்

கோபால்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கயிறு கட்டி ஆற்றை கடந்தனர்.கணவாய்பட்டி ஊராட்சியில் உள்ளது எஸ்.கொடை கொம்புகாரப்பள்ளம். இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அங்குள்ள திருமணிமுத்தாற்றை கடந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். பாலம் வசதி இல்லாததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது கிராமத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்லும் கிராம மக்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்கின்றனர். ஆற்றை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை