உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்.......

சேதமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்.......

சேதமான குடிநீர் குழாய்திண்டுக்கல் மாலப்பட்டி ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வால்வு பள்ளம் கற்கள் நீட்டியுள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்கள் கீழே விழுகின்றனர். சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜலட்சுமி, மாலப்பட்டி.-------..........மரக்கிளைகளால் ஆபத்துதிண்டுக்கல் எம்.வி.எம். நகரில் மரக்கிளை இடையே மின் ஒயர்கள் செல்வதால் மழை காற்று நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, திண்டுக்கல்.--------..........குப்பை எரிப்பதால் பாதிப்புபழநி முருகன் கோயில் பின்புற பைபாஸ் ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புகைமண்டலம் ஏற்படுவதால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. பக்தர்களுக்கு சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது. கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டபாணி, பழநி.--------..........அடிகுழயால் தவிக்கும் மக்கள்திண்டுக்கல் பெரிய பள்ளபட்டியில் அடிகுழாய் சேதமடைந்து இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் சேதமடைந்து துருப்பிடித்துக் கிடைக்கின்றது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிகுழாயை அகற்ற வேண்டும். குமார், பள்ளப்பட்டி.--------.........சேதமான ரோடால் அவதிஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவிலிருந்து நாகணம்பட்டி செல்லும் ரோடு பள்ளங்களாக உள்ளது. இதனால் இவ்வழயில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். ரோடை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - -கோவிந்தராஜ்,ஒட்டன்சத்திரம்.--------........வீணாகும் குடிநீரால் தவிப்புஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் ஐ.ஓ.பி. வங்கி முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சகதியாக மாறுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும். தம்பி ராஜாங்கம், புதுச்சத்திரம்.---------........குப்பையால் உருவாகும் சீர்கேடுவடமதுரையில் நான்குவழிச்சாலை நால்ரோடு சந்திப்பு பகுதியில் பாலத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் வாட்டர் கேன், மதுப்பாட்டில்கள், இதர குப்பை சேர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், வடமதுரை.---------...................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை