உரிமை தொகை கேட்டு மனு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி பாறைத்தெருவில் 75 ஏழை விவசாய குடும்ப தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தகுதி உடைய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகம் முன்பாக மகளிர் உரிமைத் தொகை கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது. பொருளாளர் முருகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், கண்ணப்பன் வெள்ளைச்சாமி கலந்து கொண்டனர்