உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைப்பூண்டு நடவு

கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைப்பூண்டு நடவு

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு நடவுப் பணி நடந்து வருகிறது.கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் ஏராளமான ஏக்கரில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு விளைச்சல் காணும் மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதையடுத்து உலக அளவில் பிரசித்தியை மலைப் பூண்டு பெற்றது. சில மாதங்களுக்கு முன் சீசன் துவங்கிய நிலையில் கிலோ ரூ. 600 க்கு விற்பனையானது. தற்போது அதிக மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு நடவுப் பணியை சில வாரங்களாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 50 கிலோ விதை மலைப்பூண்டு ரூ.16 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விலை போவதால் இதை வாங்கி நடவு பணியை துவக்கி உள்ளனர். தற்போது நடவு பணியில் நடந்து வரும் நிலையில் நான்கு மாதங்கள் பின் மலைப் பூண்டு அறுவடைக்கு தயாராகும். மருத்துவ குணம் நிறைந்த , புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு சாகுபடி தற்போது மலை பகுதியில் அதிகரித்து வருகிறது. மேலும் இச்சாகுபடியின் பரப்பளவை அதிகரிக்க தோட்டக்கலைத் துறையினர் மேல் மலைப்பகுதி விவசாயிகளுக்கு புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி