உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்

தாண்டிக்குடியில் நறுமண பயிர் நாற்று நடவு துவக்கம்

தாண்டிக்குடி: வடகிழக்கு பருவ மழை நன்கு பெய்த நிலையில் தாண்டிக்குடி மலைப்பகுதியில் விவசாயிகள் நறுமணப் பயிர் நாற்று நடவுப் பணியை செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரு வாரமாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் நறுமணப் பயிர்களான ஏலக்காய், மிளகு. ஜாதிக்காய், கிராம்பு, மலைப் பயிர்களான காபி, அவகடா, சீதா, மாதுளை, எலுமிச்சை நாற்றுக்களை விவசாயிகள் மலைத் தோட்டங்களில் நடும் பணியை துவக்கி உள்ளனர். நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்தபடி இருந்ததால் விவசாயிகள் நாற்று நடவு பணியை ஆர்வமாக செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை