உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளாஸ்டிக், குட்கா கடைகளுக்கு சீல்

பிளாஸ்டிக், குட்கா கடைகளுக்கு சீல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தடை குட்கா,பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கடைகளுக்கு அபாரதம் விதித்து,சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம் ,ராமசாமி,முருகன் உள்ளிட்டோர் நேற்று காலை திண்டுக்கல் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மெயின்ரோடு,ஆர்த்தி தியேட்டர் ரோடு பகுதிகளில் செயல்பட்ட 2 கடைகளில் 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. இரு கடைகளுக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. நகர் பகுதிகளில் செயல்படும் 4 கடைகளில் 315 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ