உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றும் வழங்கல கொரோனா ஊக்க நிதி கருணைகாட்டுங்க : குமுறுகிறார்கள் ஊராட்சி பணியாளர்கள்

இன்றும் வழங்கல கொரோனா ஊக்க நிதி கருணைகாட்டுங்க : குமுறுகிறார்கள் ஊராட்சி பணியாளர்கள்

குஜிலியம்பாறை: கொரோனா கால பணியில் ஈடுபட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் இன்னும் வழங்கவில்லை. அதற்குள் அடுத்த கொரோனாவே வந்துவிடும் போல் உள்ளது, எப்போது வழங்குவார்கள் என ஊழியர்கள் குமுறுகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஏன் உலக அளவில் 2019--,-20, 21 ல் கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை, உயிர் சேதத்தை, தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியது. மனிதன் உயிருடன் தப்பி பிழைப்பதே பெரும்பாடாக இருந்தது. இக்கட்டான நேரத்தில் தமிழக அரசு, ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், குடிநீர் மோட்டார் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்டோரை பணி செய்யுமாறு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் ,ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத்தொகையும் அரசு அறிவித்தது. அரசு அறிவித்த ஊக்கத்தொகை மற்றவர்களுக்கு எல்லாம் கிடைத்த நிலையில் ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாதங்களுக்கான ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை .இதனால் பணியாளர்கள் விரக்தியில் உள்ளனர். இவர்களுக்கான ஊக்கத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.........விரைந்து வழங்குங்க கொரோனா காலத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது உயிரையும் துச்சமண மதித்து முழு துப்புரவு, தூய்மை ,குடிநீர் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்க தொகை ரூ.15 ஆயிரம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்குள் மற்றொரு கொரோனாவே வந்துவிடும்போல் உள்ளது. ஊராட்சி பணியாளர்களின் நலன் கருதி அரசு அறிவித்த கொரோனா ஊக்க நிதியை விரைந்து வழங்க வேண்டும்.சண்முகம்,கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ,ஆர். வெள்ளோடு ..........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை