உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடை மழையை எதிர்நோக்கி உழவு பணிகள் மும்முரம்

கோடை மழையை எதிர்நோக்கி உழவு பணிகள் மும்முரம்

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், எஸ்.பாறைப்பட்டி, சீவல்சரகு, வக்கம்பட்டி, வீரக்கல் பகுதிகளில் கடந்தாண்டு வரை போதிய மழையின்றி குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவியது. மக்காச்சோளம், சோளம், சுண்டல், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். சில மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், பெரும்பாலான நீராதாரங்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதே நேரத்தில் கடந்தாண்டை விட முன்னதாகவே கோடையின் கடுமையும் துவங்கியுள்ளது. சில நாட்களாக கொளுத்தும் வெயிலால் விவசாயக் கிணறுகள் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் கோடைமழை கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது. பலர் வெங்காயம் சாகுபடி செய்ய ஆயத்தமாக இருந்தனர். போதிய விலை கிடைக்காமல், சாகுபடி செய்த வெங்காயத்தை விவசாயிகள் சேமிக்க துவங்கியுள்ளனர். பருத்தி, மக்காச்சோளம் என, சாகுபடியை மாற்ற தயாராகி வருகின்றனர். கோடை மழையை எதிர் நோக்கி இப்பகுதிகளில் உழவுப் பணி மும்முரமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை