| ADDED : மார் 01, 2024 06:30 AM
திண்டுக்கல் : இன்று துவங்கும் பிளஸ்2 தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 87 மையங்களில் 19,571 மாணவர்கள் எழுதுகின்றனர்.இன்று பிளஸ் 2தேர்வு துவங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் 87 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் 8,760 ,மாணவிகள் 10,626 ,தனித்தேர்வர் 186 என 19,571 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையில் 143 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் செயல்படும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் பள்ளி வருவதற்கு அனுமதியில்லை. தேர்வு முடிந்ததும் மதியத்திற்கு மேல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இது போல் மார்ச் 4ல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதில் மாணவர்கள் 10,993, மாணவிகள் 11,752, தனித்தேர்வர்கள் 198 என 22,943 பேர் தேர்வு எழுதுகின்றனர்.