மேலும் செய்திகள்
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
18-Oct-2025
சின்னாளபட்டி: திண்டுக்கல் தெற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் ஆரியநல்லூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜஸ்டின் திரவியம், மாவட்ட அமைப்பு செயலாளர் அமலபிரசன்னா, வன்னியர் சங்க தலைவர் மகேஷ்நாத், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி, இளைஞரணி செயலாளர் தினேஷ், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தல், மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை துவக்குதல், ஆத்தூர் தொகுதியில் குடிநீர், விவசாய பிரச்னைகளை களையும் வகையில் குடகனாற்றில் உயர்த்தப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
18-Oct-2025