உள்ளூர் செய்திகள்

பா.ம.க.,வினர் கைது

செம்பட்டி : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் செம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணி, ஆத்துார் ஒன்றிய முன்னாள் செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகுவேல் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ