உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு

திண்டுக்கல் : திண்டுக்கல், மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 25, கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் 31 உட்பட 3 நபர்கள் சேர்ந்து, 2023-ல் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்தாக போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுதரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். இதில், தமிழரசன், ராஜ்குமார் இருவருக்கும் 5 ஆண்டு சிறை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பு வழங்கினார். ஒருவர் 16வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் அவர் மீதான விசாரணை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை