உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரி மாணவியிடம் சீண்டல் கண்டக்டர் மீது போக்சோ வழக்கு

கல்லுாரி மாணவியிடம் சீண்டல் கண்டக்டர் மீது போக்சோ வழக்கு

கன்னிவாடி: கல்லுாரி மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட கீழதிப்பம்பட்டி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவியர் சிலர் திண்டுக்கல்லில் படித்து வருகின்றனர். கல்லுாரி முடிந்து கோம்பை சென்ற அரசு பஸ்சில் தருமத்துப்பட்டி சென்றனர். கண்டக்டராக பணிபுரிந்த கீழதிப்பம்பட்டி காளிமுத்து 40, ஒரு மாணவிக்கு டிக்கெட் பின்புறம் அவரது அலைபேசி எண்ணை எழுதி கொடுத்தார். இதை மாணவி கண்டுகொள்ளாத நிலையில் நேற்று முன்தினம் அதே பஸ்சில் சம்பந்தப்பட்ட மாணவிக்கும், அவருடன் வந்த 2 மாணவியருக்கும் டிக்கெட் வழங்காமல் காளிமுத்து தாமதப்படுத்தினார். அங்கிருந்த பெண்கள் சிலர் வலியுறுத்தியபின் டிக்கெட் கொடுத்தார். இதை தொடர்ந்து கண்டக்டர் சீண்டலில் ஈடுபட்டதால் மாணவி பெற்றோருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். தருமத்துப்பட்டியில் பஸ்சை சிறை பிடித்த உறவினர்கள் கண்டக்டரை தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாணவியர் சிலர் கொடுத்த புகாரில் கன்னிவாடி போலீசார் காளிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி