உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள்கோயில்பட்டியில் போலீஸ் குவிப்பு

பெருமாள்கோயில்பட்டியில் போலீஸ் குவிப்பு

சின்னாளபட்டி: பெருமாள்கோயில்பட்டியில் காளியம்மன் கோயில் அருகே காலி இடத்தில் கூடாரம் அமைப்பது தொடர்பாக இரு வேறு தரப்பினர் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு தரப்பினர் கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கான பணிகள் துவங்கிய சூழலில் அதனை அகற்ற மற்றொரு தரப்பினர் வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கூடாரத்தை அகற்ற மறுத்த சூழலில் காளியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு பகுதியில் சிலர் கற்கள் ஊன்றி வேலி அமைக்க முயன்றனர்.சின்னாளப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு காணப்படாத சூழலில் திண்டுக்கல் ஆர் .டி.ஓ ., அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை