ரூ.65 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தம்பதியரிடம் ரூ.65 லட்சம் மோசடி செய்த போலி தொழிலதிபரை போலீசார் தேடுகின்றனர். திண்டுக்கல் வீரபாண்டியம்மாள் கோயில் தெருவை சேர்ந்த காமராஜ், அவரின் மனைவி செண்பகராணி 64, இருவரிடம் நேருஜி நகரை சேர்ந்த அபுசக்மான் தொழில் அதிபராக அறிமுகப்படுத்தி பழகிவந்தார். 2023ல் நிலம், வீடு வாங்க ரூ.35 லட்சம் தேவைப்படுகிறது. ஒன்றிரண்டு மாதங்களில் திரும்ப தருகிறேன் எனக்கூறி உள்ளார். இதை நம்பிய தம்பதியர்கள் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.35 லட்சம், அதன்பின் பல்வேறு தவணைகளில் மேலும் ரூ.30 லட்சம் என ரூ.65 லட்சத்தை அபுசக்மான் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினர். ஆனால் கடனை திரும்பக்கொடுக்காமல் ் ஏமாற்றி வந்தார்.பணத்தை கேட்டபோது லாரி ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். செண்பகராணி எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளித்தார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிந்துவிசாரிக்கிறார்.