உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

மது கடத்தியவர்கள் கைதுவத்தலக்குண்டு: விருவீடு தர்மராஜபுரத்தில் விருவீடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது டூவீலரில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்த போலீசார் சோதனையிட்ட போது கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது. 48 வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கே.உச்சப்பட்டி அமர்நாத் 23, உசிலம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரை கைது செய்தனர்.சிறுமிகள் மாயம்வடமதுரை: நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். அய்யலுார் கோம்பையை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இவ்விரு சிறுமிகளும் வீடுகளில் இருந்து மாயமாகினர். வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.திருட முயன்ற இருவர் கைதுநத்தம்: கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 53. இவர் யூனியன் அலுவலகம் எதிரே பஞ்சர் கடை நடத்துகிறார். இவர் ஜன.16-ல் இரவு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது இருவர் பஞ்சர் கடையில் திருட முயன்றது தெரிந்தது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மானாமதுரை கிஷோர் 20. மதுரை நவீன் 20, என்பது தெரிந்தது. எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ