உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள் ...

'போக்சோ'வில் தம்பதி கைதுவடமதுரை: எரியோடு பகுதியை சேர்ந்த சிறுமியை உசிலம்பட்டி ரவிகிரி 26, ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார். ரவிகிரி, உடந்தையாக இருந்த அவரது மனைவி சிவரஞ்சனி 21, ஆகியோரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வடமதுரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கைதுசின்னாளபட்டி: திருப்பரங்குன்றம் செல்ல ஆயத்தமாக இருந்த சிவசேனா இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகபாண்டி, பா.ஜ., வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன், சின்னாளபட்டி மண்டல் முன்னாள் தலைவர் விக்கேஷ், பொதுச் செயலாளர் விமல்குமார் உள்ளிட்டோரை சின்னாளபட்டி போலீசார் கைது செய்தனர். சிறுவன் தற்கொலைபழநி: பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த மகேந்திரன் மகன் அரவிந்த் 16. அரவிந்தை நன்கு படிக்க கோரி பெற்றோர் அறிவுறுத்தியதால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் தாத்தா, பேரன் காயம்வடமதுரை: பிலாத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா 65. பேரன் சந்துரு 12, உடன் அய்யலூருக்கு டூவீலரில் சென்றார். தீத்தாகிழவனுார் அருகே ரெட்டியார்சத்திரம் எல்லைப்பட்டி முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அதே நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு கார் முத்துகிருஷ்ணன் கார் மீது மோதி விபத்தில் சிக்கியது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.பணம் பறித்தவர்கள் கைதுதிண்டுக்கல்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனியார் ஊழியர் சதீஷ்குமார்32. இவர் கோவை செல்ல நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்போது நந்தவனப்பட்டி சங்கர்குமார்24. ஈஸ்வரன்23, இருவரும் சதீஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். வடக்கு போலீசார் சங்கர்குமார்,ஈஸ்வரனை கைது செய்தனர்.தவறி விழுந்தவர் பலிதாண்டிக்குடி: பூலத்துார் ஜே.பி., நகரை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் 31. மெயின் ரோட்டார குடிநீர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி