உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்

போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல் திண்டுக்கல்: மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பேக்கை சோதனை செய்த போது 4.400 கிலோ கஞ்சா இருந்து தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் விவசாயி பலி வடமதுரை: அய்யலுார் அருகே சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்த விவசாயி அப்பாச்சாமி 60. அக்.15ல் டூவீலரில் வீட்டிலிருந்து அதே பகுதி டீக்கடைக்கு சென்றபோது நிலை தடுமாறி டூவீலருடன் விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை