மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் குட்கா பறிமுதல்
04-Oct-2025
மது பாட்டில்கள் பறிமுதல் நத்தம் : தர்பார் நகர் பகுதியில் அய்யாபட்டியை சேர்ந்த கனகராஜ் 32, என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த நத்தம் போலீசார் 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புகையிலை விற்றவர் கைது வடமதுரை : தும்மலக்குண்டு ரோடு ஆதம்ஸ் நகரில் பெட்டிக்கடை நடத்துபவர் பாலாமணி 55. இப்பகுதியில் ரோந்து சென்ற வடமதுரை போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 11 கிலோ புகையிலை பொருட்களை இவரது கடையில் பறிமுதல் செய்தனர். பாலாமணி கைதானார். ஒருவர் பலி வடமதுரை: கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் 60. தாமரைப்பாடி பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த அக்.10ல் நின்றிருந்தபோது பாடியூர் பட்டாணி 55 ஓட்டி வந்த டூவீலர் மோதி படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2025