உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருஆவினன்குடியில் கோபுர கலசங்கள் பொருத்த பூஜை

 திருஆவினன்குடியில் கோபுர கலசங்கள் பொருத்த பூஜை

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச. 8ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டது. பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் நடும் பணி நவ.5 அதிகாலை நடந்தது. டிச.8ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மூலவர் சன்னதி விமான கலசம், ராஜகோபுர விமான கலசங்கள் ஏழு , பிரகார சுற்று சன்னதிகளின் விமான கலசங்கள் என 19 கலசங்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் எடுத்து வரப்பட்டு பொருத்தப்பட்டன. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் மாரிமுத்து பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை