உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்

3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்

திண்டுக்கல் : மாவட்டத்தில் உள்ள சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும்வகையில் இந்திய அஞ்சல் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம் செயல்படுகிறது. இந்த சேவை தற்போது மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி தலைமை அஞ்சலகங்கள், ஒட்டன்சத்திரம் துணை அஞ்சலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதியாளர்கள் விருப்பத்திற்கு இணங்க தேவைப்படும் அஞ்சலகங்களில் இச்சேவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.விவரங்களுக்கு திண்டுக்கல் தலைமை அஞ்சலக விற்பனை நிர்வாகி சிவக்குமார் 95781 19881, பழநி , ஒட்டன்சத்திரம் அஞ்சலக விற்பனை நிர்வாகி கனிஷ்கா 86376 29245ஆகியோரை அணுகலாம். இச்சேவையை சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் நாகா நாயக் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை