உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது

மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது

பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் 'போஸ்டர்' அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாச்சாரம் பெருகி விட்டது. ரோட்டில் நடந்து செல்லும்போது திரும்பும் திசையெல்லாம், பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. விளம்பரம் செய்ய அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல பயன்படுத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் எந்த பகுதிக்கு போனாலும் இதேபோன்ற நிலையை பார்க்க முடிகிறது. கண்டன போஸ்டர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களை உள்ளடக்கிய போஸ்டர்களை இரவு நேரங்களில் ஒட்டுவோரால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. அச்சகங்களில் பெயர்களும் இருப்பதில்லை. இதற்கு ஒரு நிரந்தரதீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை