மேலும் செய்திகள்
கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
11-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம் , காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர்ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்திக்கும், ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி பெருமாள் கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது.ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயில் ,ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
11-Apr-2025