| ADDED : டிச 03, 2025 07:21 AM
திண்டுக்கல்: பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம் ,காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடந்தது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன், மேற்கு ரதவீதி சிவன், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி பெருமாள் கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் , அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.--