சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ தினத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பிரதோஷ நாளான நேற்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி, - வி.ஐ.பி., நகர் சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீகுபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர்கோயில், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபராதனைகள் நடந்தது. நாகல்நகர் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா கோயிலில், விபூதி அபிேஷகம், பால் அபிேஷகம், அன்னதானம் நடந்தது.