உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு

ரோல்பால் வீரர்களுக்கு பாராட்டு

சின்னாளபட்டி : தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டிகள் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்தது. தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளபட்டி ராஜன் மையத்தில் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் பங்கேற்றனர். 17 , 14 , 9 வயது மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் நடந்த போட்டியில் பெண்கள் அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்கள் அணி 4 பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது. வென்ற திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடந்தது. மாஸ்டர் பிரேம்நாத் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் கலையரசன், சக்திவேல், தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை