உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுக்கலாமே: சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று

தடுக்கலாமே: சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று

மாவட்டத்தில் நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மீன், மாடு, ஆடு, கோழி, கருவாடு போன்ற இறைச்சிக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கடைகளின் கழிவுகள் நகரின் சாலையோரம் குப்பையுடன் சேர்த்து கொட்டப்படுகிறது. இதனால் நோய் தொற்று ,சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் குப்பையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாப்பிட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவ்வாறு சாப்பிடும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று நாய்களுக்கு ஏற்படுகிறது. நோய் தொற்று உடன் தெருக்களில் நாய்கள் சுற்றி திரிவதால் சுகாதாரக் கேடு அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை