மேலும் செய்திகள்
பெண் வழக்கறிஞரை மிரட்டிய இருவர் மீது வழக்கு
18-Dec-2024
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழிப்பறி வழக்கில் கைதான நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்து கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்ற போது முகமதுதாரிக் அன்வர் 26, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இவரை நகர் வடக்கு போலீஸார் கைது செய்தனர். பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுப்பதற்காக போலீசார் முகமதுதாரிக் அன்வரை பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே அழைத்துச் சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து பாலத்திலிருந்து கீழே குதித்தார்.இதில் முகமதுதாரிக் அன்வரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
18-Dec-2024