உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் கோப்பையில் வென்றவர்களுக்கு பரிசு

முதல்வர் கோப்பையில் வென்றவர்களுக்கு பரிசு

திண்டுக்கல்: முதல்வர் கோப்பைக்காக மாவட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆக.26 ல் தொடங்கி செப். 12 வரை நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் 25,177 , மாணவிகள் 26,852 , கல்லுாரி மாணவர்கள் 2,542 , மாணவிகள் 2,605, 334 மாற்றுத்திறனாளி, 193 மாற்றுத்திறனாளி பெண்கள், பொதுமக்களில் 1,336 ஆண்கள், 309 பெண்கள், அரசு அலுவலர்களில் 1768 ஆண்கள், 1684 பெண்கள் என 62,800 பேர் இணையவழியில் பதிவு செய்து கலந்து கெண்டனர். இதில் 2298 பேர் வெற்றி பெற்றனர். 700-க்கு மேற்பட்டோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் சரவணன் வழங்கினார். எஸ்.பி., பிரதீப், ஜி.டி.என், கல்லுாரி தாளாளர் ரத்தினம், கால்பந்து கழக தலைவர் சண்முகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ