உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல்

திண்டுக்கல் மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மண்டல போக்குவரத்துக்கழகத்திற்கு தானியங்கி கதவுடன் இயங்கும் 8 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை ஆர்.டி.ஓ.,பதிவுசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பஸ்கள் காட்சிப்பொருளாக மண்டல அலுவலகத்தின் வளாகத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பயன்பாட்டுக்காலம் முடிந்தபின்னும் வாகனம் புதுப்பித்துல் அடிப்படையில் பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பஸ்கள் ஏராளம் உள்ளது. இந்த பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் இலக்கை எட்ட முடியாமலும உதிரிபாகங்கள் தேய்மானத்தாலும் பல இடங்களில் பிரேக்டவுன் ஆகி நிற்கும் நிலை உள்ளது. கூரை, படிக்கட்டு பெயர்ந்து விழுதல் என பொதுமக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. இந்நிலையில் டெப்போக்களில் உதிரி பாகங்களும் போதுமான அளவில் இல்லாததால் பயன்பாட்டில் உள்ள பழைய பஸ்களை பழுத நீக்கி சமாளித்து வரு கின்றனர். புதிய பஸ்கள் மாவட்ட தேவைக்கேற்ப வழங்கப்படும் என சட்டசபையில் அத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து மண்டலத்துக்கு தானியங்கி கதவுடன் இயங்கும் வகையில் முதற்கட்டமாக 8 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய வரவாக வந்துள்ள 8 பஸ்களும் கும்பகோணம் மண்டலத்தின் பெயரில் திண்டுக்கல் மண்டலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஆர்.டி.ஓ., பதிவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதால் புதிய பஸ்கள் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அலுவலக வளாகத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்து கிருஷ்ணன் கூறுகையில், ''ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய பஸ்கள் வழங்குவதற்கு அரசு ஒதுக்கீடுகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக 8 புதிய பஸ்கள் வந்துள்ளன. இதை பதிவு செய்வதில் சிக்கலும் எந்த இல்லை. இதுகுறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை