விளைபொருள் ஏற்றுமதி கருத்தரங்கு
திண்டுக்கல் : திண்டுக்கலில் வேளாண்மை விற்பனை,வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் விளைபொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது.வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் உமா வரவேற்றார். எம்.பி., சச்சிதானந்தம் திறந்து வைத்தார்.வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆபிரகாம் பேசினார். கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், பெனாசிரம் அக்ரோ எக்ஸ்போ மேலாண்மை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான், நிறுவன முதன்மை செயல் அலுவலர் செல்வராஜ். ஜே.கே. பயோ பார்ம் நிறுவனர் ஜெயக்குமார் உழவர் உற்பத்தி நிறுவன இயக்குநர் சக்திஜோதி பங்கேற்றனர். விற்பனைக்குழு பழனிச்சாமி நன்றி கூறினார்.