உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மின்வசதி இல்லா வீடுகளுக்கு சோலார் விளக்குகள் வழங்கல்

 மின்வசதி இல்லா வீடுகளுக்கு சோலார் விளக்குகள் வழங்கல்

வடமதுரை: அய்யலுார் மலையோர கிராமங்களான மம்மானியூர், ஊரானுார், பஞ்சம்தாங்கி புதுார், புத்துார், பிச்சம்பட்டி, பூசாரிபட்டி, மலைப்பட்டி, ஸ்ரீராமபுரம் பகுதியில் ஏராளமானோர் மின்வசதியின்றி வசிக்கின்றனர். இவர்களுள் 65 குடும்பங்களுக்கு காசா பவுண்டேஷன் சார்பில் இலவசமாக வீட்டு உபயோக சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இரு விளக்குகள் எரியவும், அலைபேசி சார்ஜ் செய்தும் கொள்ளலாம். பாகாநத்தத்தில் நடந்த இவ்விழாவிற்கு கொம்பேறிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். இசை நிறுவன ஆலோசகர் சின்னையா வரவேற்றார். எச்.டி.எப்.சி., வங்கி கள அலுவலர் கார்த்திக், வட்டார இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் சின்னையா, சமூக பணியாளர்கள் கார்த்திகா, வீரமணி, உமாமகேஸ்வரி, வெண்ணிலா பங்கேற்றனர். ஏற்பாட்டினை இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி