உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு

வேடசந்துார், செப்.17 வேடசந்துார் பேரூராட்சி 9-வது வார்டு நேருஜி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தற்போது கடும் வறட்சி காரணமாக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் போதிய நீர் ஆதாரம் இல்லை. பேரூராட்சி குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜினிடம் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி மனு அளித்தனர். விரைவில் தீர்வு காண்பதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி